தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 1589 காலியிடங்கள் – விண்ணப்பிக்க 15 நாட்கள் மட்டுமே!
TNSTC Recruitment 2025 Apply Online Now
TNSTC Recruitment 2025 Apply Online Now: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் (TNSTC) பல்வேறு மண்டலங்கள் மற்றும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC), அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகியவற்றில் மொத்தம் 1589 பயிற்சிப் பணியிடங்களை (Apprenticeship) நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேர்வு கிடையாது; மதிப்பெண்கள் அடிப்படையில் நேரடித் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2025
1. பொறியியல் பட்டதாரிப் பயிற்சி (Graduate (Engineering) Apprentices)
2. பட்டயப் பயிற்சி (Technician (Diploma) Apprentices)
3. பட்டதாரிப் பயிற்சி (Graduate Apprentices)
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
தேர்வு செய்யப்படும் முறை:
- இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு கிடையாது.
- விண்ணப்பதாரர்கள் அவர்கள் படித்த டிகிரி, டிப்ளமோ அல்லது பொறியியல் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு காலத்திற்கு பயிற்சி அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
- முதலில், விண்ணப்பதாரர்கள் www.nats.education.gov.in என்ற மத்திய அரசின் தேசிய பயிற்சித் திட்ட இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
- பதிவு செய்த பிறகு, அதே இணையதளத்தில் உள்ள தேடல் பகுதியில் (Search) சம்பந்தப்பட்ட போக்குவரத்து மண்டலங்களின் பெயர்களைத் (TNSTC – Kumbakonam, MTC – Chennai, etc.) தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2025
குறிப்பு: இந்தப் பணியிடங்கள் அனைத்தும் பயிற்சிப் (Apprenticeship) பணியிடங்கள் ஆகும். இது நிரந்தர அரசு வேலைவாய்ப்பு அல்ல. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.