TVK விஜய் கட்சியின் அதிகாரபூர்வ சின்னம் வெளியானது!..விஜய் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!
TVK Official Symbol Released Whistle 2026
TVK Official Symbol Released Whistle 2026: தவேக கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமானது தற்போது வெளியாகியுள்ளது.

தமிழக அரசியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்ற நடிகர் விஜய்யின் TVK கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமாக விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் இது கட்சியின் முதல் வெற்றி என்று உற்சாகமாக தெரிவித்துள்ளார்.
விசில் சின்னத்தின் முக்கியத்துவத்தை குறித்து விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கியமான கருத்துகளை பற்றி இச்செய்தி தொகுப்பில் நாம் காண்போம்.
விஜய் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள முக்கியமான கருத்துக்கள்:
மக்களின் பாதுகாவலன்: விசில் என்பது நாட்டைப் பாதுகாப்பவர்களின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
முதல் வெற்றி அத்தியாயம்: சின்னம் கிடைத்தது தவெக-வின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
ஒற்றுமையின் சின்னம்: இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னமாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் எதிர்பார்ப்பு:
சின்னம் கிடைத்த கையோடு, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மகத்தான வெற்றி பெறுவது உறுதி என விஜய் தனது தொண்டர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் ‘விசில்’ சின்னம் தற்போது வைரலாகி வருகிறது.