யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்கிறீர்களா?- இந்த 6 விஷயங்களை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்!
UPI Users Avoid Cyber Crime Frauds
UPI Users Avoid Cyber Crime Frauds : தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், சைபர் குற்றங்களும் பெருகி வருகின்றன. குறிப்பாக, யூபிஐ (UPI) பயன்படுத்துபவர்கள் மோசடி செய்பவர்களின் முதல் இலக்காக இருக்கின்றனர்.
இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, நிபுணர்கள் பரிந்துரைக்கும் 6 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கு காணலாம்.
பாதுகாப்பு குறிப்புகள்
- யூபிஐ ஐடியை சரிபார்க்கவும்: நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு பணம் அனுப்பும்போது, யூபிஐ ஐடியை ஒன்றுக்கு இரண்டு முறை சரிபார்க்கவும். இது தவறான கணக்கிற்கு பணம் செல்வதை தடுக்கும்.
- யூபிஐ பின் (PIN) எண்ணை பகிர வேண்டாம்: உங்கள் யூபிஐ பின் எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம். வங்கி ஊழியர் என்று கூறினாலும், உங்கள் பின் எண்ணை கொடுக்க வேண்டாம். இது ஒரு மோசடி அழைப்பாக இருக்கலாம்.
- மேலும், உங்கள் பின் எண்ணை அடிக்கடி மாற்றுவது பாதுகாப்பானது.
- அறிமுகமில்லாத கியூஆர் (QR) குறியீடுகளை ஸ்கேன் செய்யாதீர்கள்: அறிமுகமில்லாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் வரும் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப வேண்டாம். இது உங்கள் பணத்தை இழக்க வழிவகுக்கும்.
- வங்கி கணக்கு விவரங்களை சரிபார்க்கவும்: உங்கள் வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டை அவ்வப்போது சரிபார்க்கவும். இதன்மூலம், உங்களுக்குத் தெரியாமல் ஏதேனும் பரிவர்த்தனை நடந்துள்ளதா என்பதை எளிதாகக் கண்டறியலாம்.
- யூபிஐ செயலியை அப்டேட் செய்யவும்: உங்கள் யூபிஐ செயலியை தொடர்ந்து அப்டேட் செய்வது அவசியம். அப்டேட்கள் புதிய பாதுகாப்பு அம்சங்களை வழங்குகின்றன.
- மோசடியில் சிக்கினால் புகார் அளிக்கவும்: நீங்கள் ஒருவேளை மோசடியில் சிக்கினால், பயப்பட வேண்டாம். உடனடியாக 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கவும். சைபர் மோசடிகளைத் தடுக்க காவல் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், யூபிஐ பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ளலாம்.