Village School Girls 1000 Incentives Scheme
கிராமப்புற மாணவியர்களுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை தமிழக அரசு அறிவிப்பு எவ்வாறு விண்ணப்பிப்பது? என்பதைப் பற்றி நாம் இப்போது முழுமையாக பார்க்க இருக்கிறோம்.
தமிழக அரசு பெண் குழந்தைகளின் கல்வியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக திகழ பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
ஏற்கனவே கல்லூரிகள் படிக்கக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்கள் வாயிலாக மாதம் ரூபாய் 1000 வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதே போல மகளிர்க்கு ரூபாய் 1000 உரிமை தொகையானது வழங்கி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது கிராமப்புறத்தில் பயிலக்கூடிய மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு திட்டத்தை அறிவித்துள்ளது.
திட்டத்தில் தகுதி உடைய மாணவிகள்
மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவிகளுக்கு ரூபாய் 500 ஊக்க தொகையும்.
ஆறாம் வகுப்பு முதல் பயிலக்கூடிய மாணவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்க தொகையும் வழங்க உள்ளது.
கிராமப்புற மாணவிகளுக்கான ஊக்கத்தொகை விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்
மாணவிகள் கிராமப்புறத்தில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவிகளாக இருக்க வேண்டும்
மாணவிகள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC/ DNC மரபினர் வகுப்பினை சார்ந்த பெண் குழந்தைகளுக்கு மட்டும் இது பொருந்தும்.
ஒரே குடும்பத்தில் உள்ள இரண்டு பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்
விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமையானது அளிக்கப்படும்.
விண்ணப்பிக்க தொடர்பு கொள்வது யாரை?
கிராமப்புற மாணவர்களுக்கான ஊக்கத்தொகை பெற தகுதியுடைய மாணவிகள் தாங்கள் தற்போது பயிலும் சம்பந்தப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களை அணுகி இத்திட்டத்தின் கீழ் பயன்படலாம்.