12th படித்திருந்தால் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு!- மத்திய அரசு பணி மிஸ் பண்ணிடாதீங்க!
VITM Job Notification 2025 Apply Online Link
VITM Job Notification 2025 Apply Online Link: விஸ்வேஸ்வரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம் (Visvesvaraya Industrial & Technological Museum – VITM) –ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலிப் பணியிட விவரங்கள்
அனைத்திந்திய வேலைவாய்ப்பு
கல்வித் தகுதி, சம்பளம் மற்றும் வயது வரம்பு
1. Exhibition Assistant ‘A’
- கல்வித் தகுதி: Visual Art / Fine Arts / Commercial Arts ஆகியவற்றில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
- சம்பளம் (தோராயமாக): மாதம் ₹59,600/-
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. Technician ‘A’
- கல்வித் தகுதி:
- SSC/10ஆம் வகுப்பு அல்லது மெட்ரிகுலேஷன் தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் ITI சான்றிதழ் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.
- 2 ஆண்டுகள் கால அளவு கொண்ட சான்றிதழ் பெற்றவர்கள், சான்றிதழ் பெற்ற பின் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- 1 ஆண்டு கால அளவு கொண்ட சான்றிதழ் பெற்றவர்கள், சான்றிதழ் பெற்ற பின் இரண்டு ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- சம்பந்தப்பட்ட துறைகள்: Carpentry / Fitter / Electronics / Electrical.
- சம்பளம் (தோராயமாக): மாதம் ₹38,908/-
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. Office Assistant (Gr.III)
- கல்வித் தகுதி:
- 12ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.
- தட்டச்சுத் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்: கணினியில் ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள்/நிமிடம் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள்/நிமிடம் என்ற வேகத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் (அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தின் சான்றிதழ் தேவை).
- சம்பளம் (தோராயமாக): மாதம் ₹38,908/-
- வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை மற்றும் முக்கியத் தேதிகள்
தேர்வு செய்யும் முறை
- Written Test (எழுத்துத் தேர்வு)
- Skill Test (திறன் தேர்வு – பதவிக்கு ஏற்றவாறு)
விண்ணப்பக் கட்டணம்
- பெண்களுக்கு/ ST/ SC/ முன்னாள் ராணுவத்தினர்/ PWD: கட்டணம் கிடையாது.
- மற்றவர்கள்: ₹750/- + 18% GST (மொத்தம் ₹885/-)
முக்கியத் தேதிகள்
- விண்ணப்பங்கள் ஆரம்பிக்கும் நாள்: 20.09.2025
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.10.2025
விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், www.vismuseum.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதிகளையும், நிபந்தனைகளையும் முழுமையாகப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |