‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. ரூ.200 டிக்கெட்டிற்கு ரூ.800 வசூல்-ரசிகர்கள் புகார்!! Jananayagan Movie Latest Shock News July 23

 ‘ஜனநாயகன்’ ரிலீஸ்.. ரூ.200 டிக்கெட்டிற்கு ரூ.800 வசூல்-ரசிகர்கள் புகார்!!

Jananayagan Movie Latest Shock News July 23

Jananayagan Movie Latest Shock News July 23: முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட டிக்கெட் ரூ.800 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

Jananayagan Movie Latest Shock News July 23

முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் இன்று ரிலீசாகிறது.
அதையொட்டி தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திரையரங்கில் முதலமைச்சர் விஜயின் ஜனநாயகம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் மூலம் 200 ரூபாய்க்கு டிக்கெட் முன்பதிவு செய்த நிலையில், தற்போது செல்போனில் கூடுதலாக 740 என செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளதாக அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் அங்கு சென்று கேட்டபோது ஒரு டிக்கெட்டின் விலை 740 என தியேட்டர் நிர்வாகத்தினர் கூறியதாக ரசிகர்கள் புகார் கூறியுள்ளனர்.
Vijay: 'Jana Nayagan': Strict instructions issued to theatres ahead of Vijay's final film as Tamil Nadu bookings to open soon | Tamil Movie News - The Times of India
அரசு நிர்ணயித்த விலை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது குறித்து திரையரங்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்க தொடர்பு கொண்டோம். தியேட்டர் நிர்வாகம் பதிலளிக்க விரும்பவில்லை.
இதேபோல், பள்ளிபாளையம் ராயல் தியேட்டர் என்னும் தனியார் திரையரங்கில் டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் வருகை தந்தபோது அரசின் விதிகளுக்கு மாறாக 300 ரூபாய் முதல் 800 ரூபாய் வரையிலும் கூடுதல் விலை வைத்து டிக்கெட் விற்கப்படுவதாக கூறி ரசிகர்கள் திரையரங்கு உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் பட விநியோக நிறுவனம் கூடுதல் விலை வைத்து விற்கச் சொல்வதால் விற்கிறோம். சட்டப்படி 190 ரூபாய்க்கு தான் டிக்கெட்டை விற்க வேண்டும். அதை போய் முதலில் நீங்கள் கேளுங்கள்.
Distributors extend support for 'Jana Nayagan' release, talks with OTT under way
மேலும் இதற்கு முன்பாக ஜனநாயகன் திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்ட போது அப்போதே எங்களிடம் குறைந்த விலையில் கட்சி நிர்வாகிகள் டிக்கெட்டுகளை வாங்கி வெளியில் அதிக விலைக்கு விற்றார்கள்.
இப்போதும் கூடுதல் விலைக்கு வெளியில் விற்பதற்காகவே எங்களிடம் குறைந்த விலையில் டிக்கெட் கேட்கின்றனர் எனக் கூறி டிக்கெட் வாங்க வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து டிக்கெட் முழுமையாக தீர்ந்து விட்டது என திரையரங்க உரிமையாளர்கள் கூறியதால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கிளம்பினர்.

Leave a Comment