அதிரடியாக சரிந்த தங்கம் விலை! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள் – இன்றைய நிலவரம் என்ன? Chennai Gold Rate July 24

அதிரடியாக சரிந்த தங்கம் விலை! மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள் – இன்றைய நிலவரம் என்ன?

Chennai Gold Rate July 24

Chennai Gold Rate July 24: ஜூலை மாத தொடக்கத்திலேயே அதிரடியாக சரிந்த தங்கம் விலை, அதைத் தொடர்ந்து சில நாட்கள் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக சரிவைச் சந்தித்த தங்கம் விலை, மீண்டும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது.

Chennai Gold Rate July 24

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,500-க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்

இந்நிலையில், இன்று தங்கம் விலை எதிர்பாராத விதமாக அதிரடியாகக் குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • 22 காரட் ஆபரணத் தங்கம்:

    • கிராம்: ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சவரன்: ரூ.2,160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • 18 காரட் தங்கம்:

    • கிராம்: ரூ.270 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,045-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • சவரன்: ரூ.2,160 குறைந்து, ஒரு சவரன் ரூ.88,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைவு!

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது.

  • வெள்ளி (கிராமுக்கு): ரூ.5 குறைந்து, ஒரு கிராம் ரூ.240-க்கு விற்பனையாகிறது.

  • வெள்ளி (கிலோவுக்கு): ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Comment