மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வெளியான புதிய அப்டேட்! – உடனே தெரிஞ்சுக்கோங்க!
Magalir Urimai Thogai Application Status Easy Check
Magalir Urimai Thogai Application Status Easy Check : தமிழ்நாட்டில், புதிதாக மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருப்போருக்காக, விண்ணப்ப நிலையை அறிய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வசதியை, தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான ungaldanstalin.tn.gov.in என்ற இணையதளத்தில் பயன்படுத்தலாம்.
விண்ணப்ப நிலையை சரிபார்ப்பது எப்படி?
புதிய பயனர்கள் (New User):
- இணையதளத்திற்குச் சென்று, “Track Grievance” என்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கவும்.
- அதில், “New User? Signup” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் பெயர் மற்றும் செல்போன் எண்ணை உள்ளிட்டு, ஒரு புதிய ID உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பதிவு செய்தவர்கள்:
- ஏற்கெனவே பதிவு செய்திருந்தால், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய செல்போன் எண்ணைப் பதிவு செய்து, உள்நுழைந்து உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம்.
இந்த எளிய வழியைப் பின்பற்றி, மகளிர் உரிமைத்தொகைக்கான உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம்.