டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ: ஹால் டிக்கெட் வெளியீடு!
TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released
TNPSC Group 2 & 2A Hall Ticket 2025 Released : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் செப்டம்பர் 28-ஆம் தேதி நடைபெற உள்ளன.

தேர்வர்கள் தங்கள் ஹால் டிக்கெட்டை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய:
- டிஎன்பிஎஸ்சி https://www.tnpsc.gov.in/ இணையதளத்திற்குச் செல்லவும்.
- ஹால் டிக்கெட் பதிவிறக்கத்திற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்கள் அனைவரும் தங்கள் ஹால் டிக்கெட்டை முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.