நாளை கரூர் வருகிறார் முதலமைச்சர் விஜய்: 10 ஏக்கரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்!
CM Vijay Tomorrow Coming Karur July 10
CM Vijay Tomorrow Coming Karur July 10: தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (ஜூலை 10) கரூர் மாவட்டத்திற்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கு நடைபெறும் மக்கள் சந்திப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கிறார். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் கரூர் செல்வது இதுவே முதல்முறையாகும்.

பிரம்மாண்ட ஏற்பாடுகள்:
10 ஏக்கர் பரப்பளவு: மக்கள் சந்திப்பு நிகழ்விற்காகக் கரூரில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அடுக்கு பாதுகாப்பு: அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சுற்றிலும் 2 அடுக்குகளாகப் பலத்த பாதுகாப்பு தடுப்புகள் (Barricades) அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வழித்தடம்: பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் நெரிசலின்றி மேடைக்கு வலதுபுறமாக வரிசையில் வந்து அமரும் வகையில் முறையான வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.
பிரத்யேக வழிகள்: மேடைக்கு அருகே இடதுபுறத்தில் முதலமைச்சரின் வாகனங்கள் வந்து செல்ல பிரத்யேக வழியும், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் வந்து செல்ல தனியாக 2 வழிகளும் பிரிக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:
கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தகுதியான நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணைகளையும், பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார்.