October Month 15 Days Bank Holidays News 2025
October Month 15 Days Bank Holidays News 2025

15 நாட்களுக்கும் மேல் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை: முழு விவரம் இங்கே! October Month 15 Days Bank Holidays News 2025

15 நாட்களுக்கும் மேல் அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு விடுமுறை: முழு விவரம் இங்கே!

October Month 15 Days Bank Holidays News 2025

மும்பை:

October Month 15 Days Bank Holidays News 2025 : வரும் அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு, வார விடுமுறைகள் மற்றும் பல்வேறு பண்டிகைகள் காரணமாக, 15 நாட்களுக்கும் மேல் விடுமுறை அளிக்கப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிப் பணிகளைத் திட்டமிடுவதற்கு இந்த விடுமுறை விவரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

October Month 15 Days Bank Holidays News 2025

வழக்கமான வார விடுமுறைகள்:

வழக்கமான விடுமுறை நாட்களான அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்றும் இரண்டாம், நான்காம் சனிக்கிழமைகளிலும் வங்கிகள் இயங்காது.

விடுமுறை நாள்தேதி
ஞாயிறுஅக்டோபர் 5
இரண்டாம் சனிஅக்டோபர் 11
ஞாயிறுஅக்டோபர் 12
ஞாயிறுஅக்டோபர் 19
நான்காம் சனிஅக்டோபர் 25
ஞாயிறுஅக்டோபர் 26

பண்டிகை மற்றும் மாநில வாரியான விடுமுறைகள்:

வார இறுதி விடுமுறைகளைத் தவிர, மாநிலங்களில் கொண்டாடப்படும் உள்ளூர் பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன:

தேதிவிடுமுறைக்கான காரணம்வங்கிகள் இயங்காத முக்கிய மாநிலங்கள்
அக். 1மகாநவமி, தசரா, விஜயதசமி, துர்கா பூஜைதமிழ்நாடு, திரிபுரா, கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்கம், உ.பி., பீகார், கேரளா உட்பட பல மாநிலங்கள்
அக். 2காந்தி ஜெயந்தி, தசரா, விஜயதசமி, துர்கா பூஜைநாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் இயங்காது.
அக். 20தீபாவளி, நரக சதுர்தசி, காளி பூஜைமகாராஷ்டிரா, ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், ஜம்மு, காஷ்மீர் மற்றும் பீகார் தவிர மற்ற மாநிலங்கள்
அக். 21 – 23தீபாவளி வார விடுமுறை (லட்சுமி பூஜை, கோவர்தன் பூஜை, பாய் தூஜ்)மாநிலங்களுக்கு ஏற்ப விடுமுறை நாட்கள் மாறுபடும். எ.கா: அக். 22 அன்று குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை.
அக். 27, 28சத் மஹாபர்வம்மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட்
அக். 31சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள்குஜராத்

வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவுறுத்தல்:

வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். எனவே, வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கிச் செயல்பாடுகளைத் திட்டமிடும்போது, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் விடுமுறை அட்டவணையை ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் ஒருமுறை உறுதி செய்துகொண்டு செயல்படுவது நல்லது.

விடுமுறை நாட்களில் ஏ.டி.எம் (ATM) மற்றும் ஆன்லைன் வங்கிச் சேவைகளான நெஃப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS), ஐ.எம்.பி.எஸ் (IMPS) மற்றும் யு.பி.ஐ (UPI) போன்றவை வழக்கம் போல் செயல்படும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *