Ration Card Holders New updates 2025
Ration Card Holders New updates 2025ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய அப்டேட் எங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வகைகளை அடிப்படையாக வைத்தே பயனாளிகள் தேர்வு செய்யப்படுகின்றனர்
முதியோர் ஓய்வூதிய முதல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ரேஷன் கார்டு அவசியம் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு ரேஷன் கார்டு அடிப்படையான மிக மிக முக்கியமான ஆவணமாக இருக்கிறது
ரேஷன் கார்ட் இல்லாதவர்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அரசு ஆவணமாக இருக்கும் ரேஷன் கார்டில் இனி அடிக்கடி திருத்தம் செய்ய முடியாது
ஆமாம் முன்பெல்லாம் எப்போது வேண்டுமானாலும் ரேஷன் கார்டுகளை திருத்தம் செய்ய முடியும் ஆன்லைன் ஆஃப்லைன் என இரண்டு வழிகளிலும் ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்
அதாவது பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம் முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளுக்கு பொதுவினியோக திட்ட குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களிலோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடக்கும் குறை தீர்ப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களிலோ நேரடியாக சென்று மனு கொடுக்கலாம்.
இதைவிட எளிமையானது ஆன்லைனில் நேரடியாக நீங்களே டிஎன்பிடிஎஸ் வெப்சைட்டில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளுக்கு உரிய ஆவணங்களை இணைத்து திருத்தங்கள் செய்யமாறு முறையிடலாம். அரசு இ-சேவை மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், இதில் இப்போது கட்டுப்பாடுகளை அரசு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு ரேஷன் கார்டில் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே திருத்தம்கோரி விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல், டூபிளிகேட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம், ரேஷன் கார்டு பிடிஎப் டவுன்லோடு ஆகியவற்றையும் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே செய்ய முடியும் வகையில் கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், உணவுப் பொருள் வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரவில்லை. அரசின் திட்டங்களுக்கு ரேஷன் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியானவையாக இருக்க வேண்டும் என்பதால், மக்கள் அடிக்கடி திருத்தம் கோரி விண்ணப்பிப்பதாக கூறப்படுகிறது. இது அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமையை அதிகரிப்பதால், துறை ரீதியாக இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

