தமிழ்நாடு தேர்தலில் அதிரடி மாற்றம் – பூத் ஸ்லிப்பில் இனி புகைப்படம் இருக்காது!
TN Election Booth Slip Change Latest News Mar 18: தமிழகத் தேர்தல் நடைமுறையில் இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) முக்கிய மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. வாக்காளர்கள் எளிதாக வாக்களிக்க வழங்கப்படும் பூத் ஸ்லிப் விநியோகத்தில் இந்த ஆண்டு புதிய நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

புதிய நடைமுறை என்ன?
புகைப்படம் நீக்கம்: இதற்கு முன்பு வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்த முறை வழங்கப்படும் பூத் ஸ்லிப்பில் வாக்காளரின் புகைப்படம் இடம் பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip): புகைப்படத்திற்குப் பதிலாக, வாக்காளர் பெயர், வரிசை எண் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் அடங்கிய ‘வாக்காளர் தகவல் சீட்டு’ இந்த ஆண்டு அச்சிடப்பட்டு வழங்கப்படும்.

வாக்காளர்கள் கவனத்திற்கு:
முக்கிய குறிப்பு: இந்த வாக்காளர் தகவல் சீட்டு என்பது நீங்கள் எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்காக மட்டுமே. இதனை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக (Identity Proof) காண்பிக்க முடியாது.
வாக்களிக்கச் செல்லும்போது உங்கள் வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள பிற அடையாள அட்டைகளைக் கொண்டு செல்வது அவசியமாகும்.