தமிழ்நாடு அரசு உரிமைகள் திட்டத்தில் 1096 காலி பணியிடங்கள் அறிவிப்பு! கல்வித் தகுதி:10th மட்டுமே -உடனே விண்ணப்பீங்க!
TN Rights Job Notification 2025 Vacancy 1096 Apply Now
TN Rights Job Notification 2025 Vacancy 1096 Apply Now: தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகம் மொத்த காலிப்பணியிடங்கள்: 1096 கடைசி தேதி: அக்டோபர் 14, 2025
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காகச் செயல்படும் தமிழ்நாடு அரசின் ‘உரிமைகள் திட்டம்’ மூலம் வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், பல்நோக்கு பணியாளர், அலுவலக உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்காக 1096 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய விவரங்கள்
- மொத்த பணியிடங்கள்: 1096
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-10-2025
- விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: tnrightsjobs.tnmhr.com
‘உரிமைகள் திட்டம்’ என்றால் என்ன?
மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான தடையில்லாச் சூழலை உருவாக்கவும், சமூக-பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தவும் உலக வங்கியின் நிதி உதவியுடன் 2022-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் ‘உரிமைகள் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றை அவர்கள் வசிக்கும் இடம் அல்லது அதற்கு அருகாமையிலேயே கிடைப்பதை உறுதிசெய்வது ஆகும்.
இத்திட்டம் 6 ஆண்டு காலத்திற்கு சுமார் ரூ.1773.87 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது.
பணிபுரியும் துறைகள்
மாவட்டம், ஒன்றியம், வட்டார அளவில் செயல்பட்டு வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (SPMU), மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகு (DPIU), ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) ஆகிய துறைகளில் உள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கு ஆட்சேர்க்கை நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை
இந்தக் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைய ஆர்வலர்கள், tnrightsjobs.tnmhr.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 14, 2025 ஆகும்.
வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை மற்றும் ஒவ்வொரு பதவிக்குமான விரிவான காலியிடங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் மேற்கண்ட இணையதள அறிவிப்பில் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம்.