தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கழகத்தில் வேலைவாய்ப்பு 240 காலி பணியிடங்கள்- சீக்கிரமா விண்ணப்பிங்க!
TNCSC Valaivaippu Arivippu 2025
TNCSC Valaivaippu Arivippu 2025: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காலியாக உள்ள பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.

முக்கிய விவரங்கள்
- நிறுவனம்: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC)
- பணியிட வகை: தமிழ்நாடு அரசு வேலை
- மொத்த காலியிடங்கள்: 240
- பணியிடம்: செங்கல்பட்டு
- விண்ணப்பிக்க ஆரம்ப நாள்: 17.09.2025
- விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.10.2025
பணியிடங்களின் விவரம்
- பதவி: பருவகால பட்டியல் எழுத்தர் (Seasonal Bill Clerk)
- சம்பளம்: மாதம் ரூ. 5,285 + அகவிலைப்படி (DA) ரூ. 5,087 + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120.
- காலியிடங்கள்: 80
- கல்வித் தகுதி: பி.எஸ்.சி (அறிவியல் & விவசாயம்) அல்லது இளங்கலை பொறியியல் பட்டம்.
- பதவி: பருவகால உதவுபவர் (Seasonal Helper)
- சம்பளம்: மாதம் ரூ. 5,218 + அகவிலைப்படி (DA) ரூ. 5,087 + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120.
- காலியிடங்கள்: 80
- கல்வித் தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சி.
- பதவி: பருவகால காவலர் (Seasonal Watchman)
- சம்பளம்: மாதம் ரூ. 5,218 + அகவிலைப்படி (DA) ரூ. 5,087 + பணி நாள் ஒன்றுக்கு போக்குவரத்துப்படி ரூ. 120.
- காலியிடங்கள்: 80
- கல்வித் தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி.
வயது வரம்பு
- SC & SCA/ ST பிரிவினர்: 18 முதல் 37 வயது வரை.
- BC/ BC(M)/ MBC பிரிவினர்: 18 முதல் 34 வயது வரை.
- OC பிரிவினர்: 18 முதல் 32 வயது வரை.
தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் முறை
- விண்ணப்பக் கட்டணம்: கட்டணம் இல்லை.
- தேர்வு முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

