TNPSC Group 4 Result 2025 When Released New Update
TNPSC Group 4 Result 2025 When Released New Update

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025-வெளியான புதிய தகவல்: தேர்வர்களே தயாரா இருங்க! TNPSC Group 4 Result 2025 When Released New Update

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025-வெளியான புதிய தகவல்: தேர்வர்களே தயாரா இருங்க!

TNPSC Group 4 Result 2025 When Released New Update

TNPSC Group 4 Result 2025 When Released New Update: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதத்தில் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 4 Result 2025 When Released New Update

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp ChannelJoin
Telegram ChannelJoin

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே. பிரபாகர், தேர்வு முடிவுகள் மூன்று மாதங்களுக்குள் வெளியிடப்படும் என்று முன்பு தெரிவித்திருந்தார். இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுகள் ஜூலை 12, 2025 அன்று நடைபெற்றதால், அதன் படி பார்த்தால், இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாதத்தில் முடிவுகள் வெளியாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தேர்வு மற்றும் முடிவுகள் பற்றிய முக்கிய தகவல்கள்

  • தேர்வு நாள்: ஜூலை 12, 2025
  • பணியிடங்கள்: 3,935
  • விண்ணப்பதாரர்கள்: 11,48,019
  • போட்டி: ஒரு பதவிக்கு சுமார் 287 பேர் போட்டியிடுகின்றனர்.
  • விடைத்தாள் திருத்தம்: தற்போது தேர்வுத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரப்பூர்வ இணையதளமான tnpsc.gov.in மற்றும் tnpscexams.in ஆகியவற்றில் முடிவுகளை வெளியிடும்.
  • தேர்வு நடைமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (Written Examination and Document Verification) மட்டுமே. நேர்முகத் தேர்வு கிடையாது.

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் 2025: இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும்? TNPSC Group 4 Exam Results Cut Off Marks New Update 2025

கடந்த ஆண்டுகளில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில், தற்போது தேர்வுகள் முடிந்த மூன்று மாதங்களுக்குள் முடிவுகளை வெளியிட டிஎன்பிஎஸ்சி முனைப்பு காட்டி வருகிறது.

தேர்வு முடிவுகள் வெளியானவுடன், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளைச் சரிபார்க்கலாம். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பற்றிய அறிவிப்புகள் பின்னர் வெளியிடப்படும்.

 

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *