சனி பெயர்ச்சி 2026: நாளை முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்கள் ராசிக்கு எப்படி?
Sani Peyarchi 2026 Rasipalan March 21 Details Here
Sani Peyarchi 2026 Rasipalan March 21 Details Here: ஜோதிட ரீதியாக நவக்கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக சனி பகவான் கருதப்படுகிறார். ஒரு ராசியில் நீண்ட காலம் தங்கி சுப மற்றும் அசுப பலன்களை வழங்கக்கூடியவர் அவர். பொதுவாக ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் சனி பகவான், முழு ராசி மண்டலத்தையும் சுற்றி முடிக்க சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது.

தற்போது கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ள சனி பகவான், பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில், நாளை (மார்ச் 21, 2026) சனி பகவான் மீன ராசியில் உள்ள உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நட்சத்திர மாற்றத்தினால் 12 ராசிகளுக்கும் ஏற்படப்போகும் தாக்கம் குறித்து விரிவாகக் காண்போம்.
ராசி பலன்கள்:
மேஷம்: 12-ம் வீட்டில் சனி இருப்பதால் ஏழரைச் சனியின் முதல் கட்டம் நடக்கிறது. இருப்பினும் இந்த நட்சத்திர மாற்றம் நிம்மதியைத் தரும். நீண்ட கால நோய்கள் மற்றும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள்.
ரிஷபம்: 11-ம் வீடான லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால், நினைத்த காரியங்கள் கைக்கூடும். தொழிலில் நல்ல செய்திகள் தேடி வரும். வருமானம் உயரவும், பணியிடத்தில் பாராட்டுப் பெறவும் வாய்ப்புள்ளது.
மிதுனம்: 10-ம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி இருப்பதால் சில சவால்கள் ஏற்படலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நிதானமாக இருப்பது அவசியம். உயர் பதவியில் இருப்பவர்கள் முடிவுகளை எடுக்கும்போது கவனம் தேவை.
கடகம்: 9-ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சனி இருந்தாலும், வார்த்தைகளில் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். தொழில் மற்றும் கடன் விஷயங்களில் விழிப்புணர்வு அவசியம்.
சிம்மம்: 8-ம் வீட்டில் சனி இருப்பதால் ஏற்ற இறக்கங்கள் நிறைந்திருக்கும். எனினும், கிடப்பில் இருந்த பணிகள் வேகமெடுக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரக்கூடும்.
கன்னி: 7-ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப் பரிமாற்றம் மற்றும் கடன் கொடுக்கும் விஷயங்களில் மட்டும் கூடுதல் எச்சரிக்கை தேவை.
துலாம்: 6-ம் வீட்டில் சனி இருப்பதால் உடல் நலனில் அக்கறை காட்டவும். குடும்பத்தில் சிறு சிறு மனஸ்தாபங்கள் வரலாம். கொடுக்கல் வாங்கலில் தெளிவான திட்டமிடல் அவசியம்.
விருச்சிகம்: 5-ம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி இருப்பதால் கல்வி மற்றும் வேலை நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
தனுசு: 4-ம் வீட்டில் சனி இருப்பதால் அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் இருந்தாலும், வியாபாரத் தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் ஆரோக்கியம் மேம்படும். புதிய பொறுப்புகள் தேடி வரும்.
மகரம்: 3-ம் வீட்டில் சனி இருப்பதால் தைரியம் கூடும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குழந்தைகளால் பெருமை சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
கும்பம்: 2-ம் வீடான தன ஸ்தானத்தில் சனி இருப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும். சொத்து சேர்க்கை மற்றும் லாபகரமான முதலீடுகள் அமையும்.
மீனம்: ஜென்ம சனியின் தாக்கம் இருந்தாலும், மன அழுத்தம் குறையத் தொடங்கும். வியாபாரத் தடைகள் விலகி முன்னேற்றம் காணப்படும். பணியிடத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவற்றை tnnewsmedia.in உறுதிப்படுத்தவில்லை.